தமிழகம்

மதிய உணவில் வாழைப்பழம் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் கொடுக்கும் பொங்கல் பரிசு..! - Asiriyar.Net

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் முருகேசன், தலைமையாசிரியர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ  தொடர் ATM கொள்ளைகளில் கைவரிசை காட்டியவர்களில் மேலும் ஒரு கொள்ளையன் கைது :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து வருகிறேன். இந்த அறிக்கையினை வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழக முதல்வரிடம் சமர்பிக்க உள்ளேன்.

மேலும், ஆய்வறிக்கையில் வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது, ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவ சேர்க்கையினை உயர்த்துவது,

ALSO READ  இலவச பயண சலுகை; ரூ.5000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு! 

இப்பள்ளிகளின் கட்டடங்களின் தரம், கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீரை பள்ளி வளாக பைப்புகளிலிருந்து ஓரிரு மாணவ, மாணவிகள் எடுத்து செல்வதனை தவிர்க்கவும், அதற்கான பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவைகளும் இடம்பெறும் என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

News Editor

‘டாக்டர்’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

News Editor

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு..

Shanthi