தமிழகம்

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல். சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும்.

இதனால் பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எனவே, சிறப்பு வாய்ந்த மகாகவி நாளான நாளை காலை 9.30 மணிக்கு காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரோட்டில் கொரோனா பாதித்த பெண்ணிற்கு பிரசவம்..

naveen santhakumar

அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜயா?:: குடிபோதையில் ரசிகர்கள் வாக்குவாதம்- ஒருவர் கொலை….

naveen santhakumar

அக்.4 முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்..!

Admin