தமிழகம்

டிசம்பர் 1 முதல் கட்டணம் உயர்வு? தமிழக அரசு அதிரடி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

டிவி சேனல் நிறுவனங்கள் பிரதான சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், வரும் டிசம்பர் 1 முதல் கேபிள், ‘டிவி’ கேபிள் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி கேபிள் கட்டணம் ரூ.106 ஆக குறைகிறது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அதிரடி! | CM Edappadi K Palanisamy slashed Arasu Cable TV tariff - Tamil  Goodreturns

விரும்பிய சேனல்களுக்கும் மாறும் முறை 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் ஆனது. புதிய முறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சேனல் நிறுவனங்கள், தங்களின் சேனல்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை, 19 ரூபாய் வரை நிர்ணயித்து கொள்ள முடியும்.

ALSO READ  கொரோனா நிதியாக 2000 ரூபாய் வழங்கும் பணி துவக்கம் !
Cable TV, கேபிள் டிவி, கட்டணம்

இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணம், ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட கட்டணத்திற்கு சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதனால், குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு, தனி கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளன. உதாரணமாக, ‘டிஸ்னி ஹாட் ஸ்டாரில்’ தொகுப்பு சேனல்கள்களின் கட்டணம், 49 ரூபாயாக உள்ளது. இது, 69 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல, ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

ALSO READ  சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

இதனால், மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அரசு கேபிள் மாதக் கட்டணமாக, 130 ரூபாய் ஜி.எஸ்.டி. உடன் 154 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமங்களிலிருந்து வருவார்கள் – ராகுல் டிராவிட்.

naveen santhakumar

சலூன் கடைகள் திறக்க அனுமதி… 

naveen santhakumar

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி

naveen santhakumar