தமிழகம்

கனமழை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகரில் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு; போக்குவரத்து மாற்றம் ..!

இது தொடர்பாக போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;

Image

ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை-போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால்- போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மெகாமார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஆற்காடுரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.

ALSO READ  அமெரிக்காவிற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் :

வாணிமஹால் முதல் பென்ஸ்பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

ALSO READ  ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… சற்றுமுன் வெளியானது அதிரடி உத்தரவு!

மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டடுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

அசோக்நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.

குமணன்சாவடி இருந்து கரையான்சாவடி வரை மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரவில் நிகழ்ந்த அதிசயம் – கண்டுகளித்த மக்கள்..!

News Editor

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரமாக குறைந்துள்ளது !

News Editor

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு

Admin