தமிழகம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். எனவே தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tamil Nadu heavy rain forecast in next few days weather department chennai  monsoon latest updates news | India News – India TV

நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஜாமீன் -நீதிபதி கோபிநாதன் உத்தரவு!

வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ  அபிராமி ராமநாதனுக்கு மத்தியஅரசு கவுரவம்…
Chance of heavy rain in Tamil Nadu for the next 3 days

இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை குமரிக்கடல் ,தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், தென் மேற்கு வங்க கடல், கேரளா ,லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

News Editor

சம்பள பாக்கி……உணவு கூட வழங்காமல் கட்டி வைத்து சித்திரவதை……பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநர்….

naveen santhakumar

சென்னைக்கு பறந்த சேலம் இளைஞரின் இதயம்.

naveen santhakumar