தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை வானிலை ஆய்வு மையம் வருகின்ற சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது என்று கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வருகின்ற சனிக்கிழமையுடன் வடகிழக்கு பருவமழை முடிவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இருந்து வட கிழக்கு பருவ மழை வருவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.
அதேவேளையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.