தமிழகம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கண்டுக்கொள்ளாத பள்ளி நிர்வாகத்திற்கு கனிமொழி கண்டனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். 

ALSO READ  தீயாக பரவும் கறுப்பு பூஞ்சை; தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு !

ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது. அந்தவகையில், திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும்,  அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பெண்ணை கொன்று தன் வீட்டில் புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதாம் ?

News Editor

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது?

Shanthi

தூத்துக்குடியில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல்  !

News Editor