தமிழகம்

2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடும் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆய்வு

தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில்அங்கங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ALSO READ  புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

சென்னையில் மட்டும் தற்போது 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிக்க தடை!

Shanthi

இன்று மறைமுக தேர்தல்: மாவட்டங்கள்,ஒன்றியங்கள் யாருக்கு?

Admin

சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் 600 பேர் பட்டியல் ரெடி

Admin