தமிழகம்

சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தொடங்கி வைத்த முதல்வர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிறப்பு இலவச மருத்துவ முகாமை தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேங்கிக் கிடக்கும் மழைநீரில் பாம்பு, பல்லி, தவளை, தேள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் மிதக்கின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  அதிக கொரோனா பாதிப்பு; முதலிடத்தில் தமிழகம் !

இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை மற்றும் தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளும் இந்த முகாம்களில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

News Editor

சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு…

naveen santhakumar

தமிழகத்தில் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டராக திருநங்கை ஒருவர் தேர்வு :

Shobika