தமிழகம்

வீதியின் விதி மாற்றுவோம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் கட்டுரைப் போட்டி.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 வயது முதல் 24 வயதுள்ள பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அல்லது தங்களது பகுதியை மேலும் மேம்படுத்த ஆலோசனைகள் ஆகியவற்றைக் கட்டுரையில் குறிப்பிட்டு ஏ4 பக்க அளவில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். விரும்புவோர் பிரச்சனைகளின் புகைப்படங்களையும் கூட இணைக்கலாம்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான சித்தஅ புதூர், காந்திபுரம்,ராம் நகர், கெம்பட்டி காலனி, உக்கடம், ராமநாதபுரம், வைசியாள் வீதி, அசோக் நகர், சிவானந்த காலனி, காமராஜபுரம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிவார்டுகள் 22,25,50-52, 54, 67-73, 80-85 உள்ளிட்ட 19 வார்டுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ளின்

கட்டுரைகள் சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மாணவர் என்பதற்கான சான்றாக அடையாள அட்டையின் ஜெராக்ஸ் பிரதி இணைக்கப்பட வேண்டும். போட்டியாளரின் முழு சுய விபரக்குறிப்பும் முகவரியுடன் இணைக்கப்பட வேண்டும்.

ALSO READ  அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு !

கட்டுரைகள் நேரிலோ அல்லது தபால் மூலமோ கோவை மக்கள் சேவை மையம், 392, 2வது மாடி, சாய் டவர், கற்பகம் வளாகம் எதிரில், 100 அடி சாலை, கோவை – 641012 என்ற முகவரியில் உள்ள மக்கள் சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். மின்னஞ்சல் / வாட்ஸப் மூலமாக வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ALSO READ  ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து பாஜக விமர்சனம்?

இப்போட்டிக்கு முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 5,000, மூன்றாம் பரிசு 3,000, சிறப்புப் பரிசு 2,000. கலந்து கொள்ளும் அனைவருக்கும் ’கோயம்புத்தூர் ஹெரிட்டேஜ் டூர்’ பரிசாக அளிக்கப்படும். சான்றிதழும் உண்டு. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 20.

மேலும் விபரங்களுக்கு: 8675555666, 0422-4379903

#veethiyinvithiyaimattruvom #coimbatore #essaycontest coimbatoreevent #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொள்ளாச்சி வழக்கு; அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம் !

News Editor

எம்.ஜி.ஆருக்கு காவி வண்ணம் பூசிய நபர்கள் …திருவண்ணாமலையில் பரபரப்பு

Admin

நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

News Editor