தமிழகம்

செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு : வழிகாட்டுதல்  நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - Polimer News - Tamil News | Latest  Tamil News ...

1) கொரோனா தொற்று காலத்தில் சிகிச்சை மையங்களாக பல கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கொரோனா தொற்று சிகிச்சை மையங்களாக தற்போதும் செயல்படும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

2) கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

3) கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

4) தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.

5) தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

6) தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும்.

7) நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்க வேண்டும்.

ALSO READ  விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழக பட்ஜெட்

8) மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியமில்லை.

9) கல்லூரியில் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேனீர் கப்புகள், டயர்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடையும் இடங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

10) சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்

இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

naveen santhakumar

கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி : முதல்வர் பழனிசாமி தொடக்கம்

Admin

இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

News Editor