தமிழகம்

தோட்டத்தில் கருகும் பூக்கள்; கவலையில் விவசாயிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா ஊரடங்கால்  விழாக்களுக்கு தடை செய்துள்ளதால், பாலக்கோடு பகுதிகளில், அறுவடை செய்யாமல் தோட்டங்களிலியே கருகி வரும் பூக்கள்.தர்மபுரி மாவட்டத்தில், காடுசெட்டிப்பட்டி பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்   ஏராளமான விவசாயிகள் சாமந்தி, சம்பங்கி, செண்டுமல்லி, பட்டன்ரோஸ் ஆகியே  பூ சாகுபடி செய்துள்ளனர்.

சீசனுக்கு  ஏற்றார்போல் சாகுபடி செய்யும் பூக்களை அறுவடை செய்யும் விவசாயிகள்  தர்மபுரி,ராயக்கோட்டை,கர்நாடாக ஆகிய பகுதிகளில்  உள்ள பூமார்க்கெட்டுக்கு கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்வார்கள்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தர்மபுரி, ராயக்கோட்டை பூமார்க்கெட் மூடப்பட்டது. மேலும்  திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளதாலும், திருமணங்கள் நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் திருமணங்களும் குறைந்துவிட்டது. 

ALSO READ  கடலுக்குள் சுதந்திரம் தினம் கொண்டாடிய நீச்சல் வீரர்

பொதுமக்களும் வீடுகளிலியே முடங்கி உள்ளதால்,  பூக்களை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால்,  பாலக்கோடு சுற்றி உள்ள பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்த சாமந்தி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை பறிக்காமல் தேட்டங்களிலியே  அப்படியே விட்டுள்ளதால், பூக்கள் தேட்டங்களிலியே கருகியும், கால்நடைகளின் மேய்சல் நிலமாக மாறி உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏப்.5 இல் மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்.. மின்சார வாரியம் வேண்டுகோள்.. ஏன் தெரியுமா?

naveen santhakumar

அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வு ரத்து- தமிழக அரசு…

naveen santhakumar

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே அன்பழகனுக்கு கொரோனா…

naveen santhakumar