தமிழகம்

சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு பேரணி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பேரணியாக சென்றனர்.

நெல்லையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. பல்வேறு அமைப்புகள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் லதா தலைமையில் மாணவர்கள் முகவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சட்டக்கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணியை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ALSO READ  மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

நெல்லை தூத்துக்குடி சாலையில் பேரணி சென்ற அவர்கள் நீதிமன்றம் வரை சென்று மீண்டும் சட்டக்கல்லூரியில் நிறைவு செய்தனர் . பேரணியில் சென்றவர்கள் கொரோனா குறித்து முக கவசம் அணிய வேண்டும் , சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் , பொது இடங்களில் எச்சில் உமிழ்தல் கூடாது என விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எளிய முறையில் திருமணம்.. மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழும் விஜயகாந்த்….

naveen santhakumar

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா…

naveen santhakumar

1000 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு..இன்று முதல் ரேஷன் கடைகளில்…

Admin