தமிழகம்

கோவையில் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் சென்டர் துவக்கம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவையில் கொரோனா தொற்று நாள் தோறும் 3000 கடந்து வரும் நிலையில். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்து நிரம்பி படுக்கை இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சேவாபாரதி சார்பில் 300 படுக்கைகளுடன் கொரோனா கேர் செண்டர் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு ஏ சிம்டம்ஸ் உள்ள நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு அறையில் இரண்டு பேர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. அவசரத் தேவைக்காக ஒரு ஆக்ஜிசன் செரிவூட்டி இயந்திரமும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மேலும் ஒரே நேரத்தில் 12 நோயாளிகள் ஆக்சிஜன் வசதி பெறும் வகையில் ஆக்ஸிஜன் பேருந்து ஒன்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் 50 க்கும் மேற்பட்ட சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்கள் இங்கு சேவை செய்து வருகின்றனர்.

கொரோனா கேர் மையத்தினை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ALSO READ  உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த சிங்கை ஜான் கலந்து கொண்டு ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்… இதில் ஏழு பேருக்கு கொரோனா….

naveen santhakumar

சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர் – பரிதாபமாக உயிரிழந்த அரசு மருத்துவர்

News Editor

இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

naveen santhakumar