தமிழகம்

வெளிநாட்டிலிருந்து கரூர் திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்தார்.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, அதில் ஒருவர்  மட்டும் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மற்ற அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 125 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  மாவட்டத்தில் 840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். இது மட்டும் இல்லாமல், கரூர் காந்திகிராமம் ஈபி காலனி பகுதியில் உள்ள பாரதியார் நகர் மூன்றாவது கிராசில் வெளிநாட்டில் இருந்து கரூர் வந்த ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதி முழுவதுமாக கரூர் நகராட்சி நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் தீவிரமாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை - அக்டோபரில் உச்சம் பெறலாம் - நிபுணர்குழு எச்சரிக்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடிமகன்கள் ஷாக்- உச்சம் தொட்டது மது விலை…!

naveen santhakumar

ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது : தமிழக அரசு

News Editor

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

News Editor