தமிழகம்

ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. 

இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதோடு கடந்த பத்து நாட்களில் 846 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தொற்று பாதிக்கப்பட்ட திருவள்ளுவர் தெரு, நாராயணசாமி தெரு, நேதாஜி நகர், கந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்ல தடைவிதித்துள்ளனர்.

ALSO READ  ”நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்”: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

இதனையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி கண்காணித்து வருவதோடு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு ! 

News Editor

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்…!

naveen santhakumar

பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் இளைஞர்கள் !

News Editor