தமிழகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடக, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடு இல்லை. 

அந்த வகையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 144 பேர் இந்நோய் தொற்றால் இறந்துள்ளனர். 19,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ALSO READ  தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

naveen santhakumar

ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது…

naveen santhakumar

இனி மெட்ரோவில் சைக்கிள்களையும் எடுத்து செல்லலாம்..!!!!

naveen santhakumar