தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா; தடை செய்யப்பட்ட பகுதியாக மாறும் தேனி மாவட்டம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இதுவரை மாவட்டத்தில் 495 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்து பொதுமக்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் இன்று தேனி நகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் என்.ஆர்.டி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது குழந்தை, 15 வயது சிறுவன் மற்றும் 41 வயதுள்ள தாய் என மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பாக தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் உள்ள 20 க்கு மேற்பட்ட  குடியிருப்பு பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு இருபுறமும் தடுப்புகள் அமைத்து வருகின்றனர். 


மேலும் சுகாதாரத்துறை சார்பாக தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். மாவட்டத்தில் போடி, கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 40 க்கு மேற்பட்ட இடங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ALSO READ  நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் ! 

#corona #Coronapositive #Coronadeath #Coronavirus #TamilThisai #theni #tamilnadu


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த நடிகர் அஜித் பிறந்தநாள் HashTag….

naveen santhakumar

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்:

naveen santhakumar