தமிழகம்

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி மற்றும் RT PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது, வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் பதிவான வாக்குகள் 4 மையங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் சார்பில் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  அனுஷ்கா மறுத்த கதையில் சகுந்தலாவாக நடிக்கும் சமந்தா...!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் அனைவரும் கொரோனா தடுப்பூசி அல்லது RT PCR பரிசோதனை மூலம் நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மற்றும் RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எஸ்.பி.பி-க்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா???? அதிரவைக்கும் அக்குபஞ்சர் மருத்துவரின் தகவல்கள்:

naveen santhakumar

நாளை தேசிய சுய ஊரடங்கு நீங்கள் தயாரா???

naveen santhakumar

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார்-கமல்ஹாசன் டுவீட்

naveen santhakumar