தமிழகம்

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி தடையின்றி கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 45 வயது மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

மேலும்   மத்திய அரசு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மாவட்டத்தில் பரவலாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள  வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. மேலும் எப்பொழுது வரும் என்று அறிவிப்பு அறிவிக்கப்படாமல் அழைக்கழிக்கப்படுவதாக குற்றம்சாட்டு நிலவி வருகிறது. 

நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பொது மக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் வீணாக அழைக்கழிக்கப்படுவதை கண்டித்தும் கொரோணா பரிசோதனைகளை அதிகப்படுத்த வலியுறுத்தியும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ALSO READ  தேசிய வங்கிகளில் -பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்கு துவக்க உத்தரவு

 இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கொரோணா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் அனைத்து குடும்பங்களும் கொரோணா நிவாரணமாக ரூ.7500 வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தமிழ்ச்சாலை’ செயலியைப் பயன்படுத்துங்கள்: அமைச்சா் க.பாண்டியராஜன்…

naveen santhakumar

வழக்கறிஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது !

News Editor

என்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம்… 

naveen santhakumar