தமிழகம்

தேச விரோதியா; நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின – விஜய் வேதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெளிநாட்டு சொகுசு காருக்கான நுழைவு வரி விலக்கு வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதி புண்படுத்திவிட்டார்” - நடிகர் விஜய் வேதனை!

திரையில் சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு.

தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தின” - நீதிமன்றத்தில் விஜய்  வேதனை | Actor Vijay said, opinion of judge in luxury car tax case hurt me |  Puthiyathalaimurai - Tamil News ...

நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழை மக்களிடம் இருந்து தான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்து தெரிவித்தார்.

ALSO READ  தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

இதனிடையே நீதிபதியின் இந்த கருத்துகள் தமிழகத்தில் விவாத பொருள் ஆனது. இதனை தொடர்ந்து வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று விஜய் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில்,

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியுள்ளன. கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது.

ALSO READ  ஸ்டாலின் வீட்டு முன் தீக்குளித்த மதிமுக பிரமுகர்! பெரும் பரபரப்பு

வழக்கு விவரங்களில் தொழிலை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை காருக்கான நிலுவை வரித்தொகையாக ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி செலுத்தி விட்டோம். எனவும் எனது வழக்கு மட்டுமின்றி தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து கூறப்பட்டுள்ளது. மேலும் என்னை தேச விரோதியாக விமர்சித்து கருத்து கூறியதும் தேவையற்றது என குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரிய இந்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

Admin

தளர்வுடன் கூடிய ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு… !

naveen santhakumar

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத்துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

News Editor