தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்கும்வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை அமல்படுத்தினார்.அதன்படி, கடந்த மே 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

MK Stalin signs 5 orders on Day 1 as TN CM; free bus travel for women,  COVID aid approved

கொரோனா பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக தளர்வுகளை அறிவித்தது. இதன்படி 27 மாவட்டங்களில் பேருந்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது.

ALSO READ  பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி
COVID-19: Examining the Impact of Lockdown in India after One Year |  Economic and Political Weekly

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரூப் 4 தேர்வு முறைகேடு : 2 தாசில்தார்கள் கைது

Admin

1000 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு..இன்று முதல் ரேஷன் கடைகளில்…

Admin

கீழடி அகழ்வாராய்ச்சிய்ல், ஒரே அகழாய்வு குழியில் மூ‌ன்று உரை கிணறுகள் கண்டுபிடிப்பு…!!

Admin