தமிழகம்

மக்களே உஷார்; மீண்டும் ஒரு புயல் சின்னம் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

A series of Low Pressure Area to form in the Bay of Bengal this October |  Skymet Weather Services

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ  சென்னையில் பெண் புரோகிதரால் செய்து வைக்கப்பட்ட புதுமை திருமணம்.

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகத்தை 11-ம் தேதி அதிகாலை வந்தடையும். நவம்பர் 10, 11-ந் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ  துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது - டி.ஜி.பி.சைலேந்திர பாபு

எனினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை குஷ்பூ அமைச்சரை சந்தித்து வேண்டுகோள்….

naveen santhakumar

சென்னை மதுரவாயலில் கூலித் தொழிலாளி கல்லைப் போட்டு கொலை

News Editor

8 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவி திட்டம் தொடக்கம்!

naveen santhakumar