தமிழகம்

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கு  4 வது நாளாக தட்டுப்பாடு  –  140   மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி நிறுத்தபட்டும் ஒரு சில மையங்களில் குறைவான மக்களே வந்து செல்கின்றனர்.  முதல் நிலை தடுப்பூசி போட்ட 28  நாட்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு தடுப்பூசி போட முடியாமல் பீதி  அடைந்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தினசரி கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை  200 ஐ நெருங்கி வருகிறது. இதனால் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு  தடுப்பூசிகள் போடபட்டு வந்தது.  இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  41 மினி கிளினிக்குகள்,   42  தனியார் மருத்துவமனைகள் என மாவட்டம் முழுவதும் 140   மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன.

ALSO READ  நவம்பர் 1ம் தேதி விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு !


 நாள் தோறும் 300 முதல் 400 பேர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டு வந்த நிலையில் அரசின் விழிப்புணர்வு நிகழ்சிகள் மற்றும்   இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தடுப்பூசி போட வந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்து. போதிய தடுப்பூசிகள் அரசு தரப்பில் இருப்பு இல்லாததால் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுபட்டு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இந்த தட்டுபாடு நிலயே நிலவி வருவதால் தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

#TamilnaduHealthSecretary #Tamilnadu #TamilThisai #corona #Coronavirus #Covid19 #Tamilnadu #DrRadhakirshnan #corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #IndiaFightCorona #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உதகையில் நிலச்சரிவு – ரயில் சேவை இன்று ரத்து..

Shanthi

ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…!

naveen santhakumar

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

News Editor