தமிழகம்

“எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்” ஜோதிமணி எம்.பி கருத்து !

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.  135 நாட்களைக் கடந்தும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி ஷாஜஹான்பூர் எல்லையில், மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னம்!… எத்தனை உயிர்கள்! எத்தனை துயரம்! என்று முடியுமோ இந்த கண்ணீர்க் கதைகள்! இந்தியா முழுவதிலும் இருந்து ஒருபிடி மண் கொண்டுவரப்பட்டு இந்த துயரார்ந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related posts

சசிகலா நலமுடன் இருக்கிறார்….கொரோனா தொற்று இல்லை…..

naveen santhakumar

தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவருக்கு கொரோனா… 

naveen santhakumar

“காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ”…. போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி.

naveen santhakumar