தமிழகம்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Andaman issues warning as depression intensifies into Cyclone Vardah- The  New Indian Express

சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்தமான் அருகே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (13ம் தேதி) உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையம், நவ.14ம் தேதி நெல்லை, குமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  சென்னை பல்கலையின் இலவச கல்வித் திட்டத்தில் 313 மாணவர்களுக்கு கட்டணமில்லா படிப்பு...!!

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா 3வது அலை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!

News Editor

ரஜினிகாந்தை யார் நீங்க என்று கேட்டவர்.. பைக் திருட்டில் கைது..

naveen santhakumar

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… மாடுமுட்டி பார்வையாளர் பலி!

naveen santhakumar