தமிழகம்

காவலன் எஸ் ஓ எஸ் செயலியை மேலும் எளிமையாக்க உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காவலன் எஸ் ஓ எஸ் செயலி எளிமையாக பயன்படுத்தும் விதமாக டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 12லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

காவலன் எஸ் ஓ எஸ் செயலியை பயன்படுத்துபவர் பெயர் செல்போன் எண் மற்றும் மாற்று செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும். இந்த முறை இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

ஏற்கனவே பிறந்த தேதி,நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி, ஆதார் எண் இவையெல்லாம் கேட்கப்பட்டது அவையெல்லாம் இனிமேல் தேவையில்லை என்றும் வேலியை பயன்படுத்துவோர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் டிஜிபி ஜே.கே.திரிபாதியின் உத்தரவை ஏற்று அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒருவார காலத்தில் அது மாற்றி அமைக்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு காவல் துறை ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

ALSO READ  டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..

இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள வலைதளங்களில் பதிவேற்றிய தாக 130 தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சென்னைக்கு மட்டும் 74 நபர்களுடைய பெயர் பட்டியலை அனுப்பி உள்ளதாகவும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு 56 பேர் அது பெயர் பட்டியல் அனுப்பி உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு காவல் துறை ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் நலமுடன் உள்ளேன்- செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்த விஜயகாந்த்

News Editor

கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

News Editor

தமிழகத்தில் ரெட் அலர்ட்..! 

naveen santhakumar