தமிழகம்

பிளஸ் 2 மறு கூட்டல், நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அரசுத் தேர்வுகள் இயக்ககம்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15ஆம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. இந்த தேர்வில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். 

ALSO READ  பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு!

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில்  விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனி தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மறுக்கூட்டல் விண்ணப்ப கட்டணம்:-

உயிரியல் பாடத்துக்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல்களை பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். 

ALSO READ  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு; தமிழக முதல்வர் பரிசீலனை !

மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் நாளை 24 முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பப்ஜி’ மதன் கைது- சிபிசிஐடி அதிரடி…!

naveen santhakumar

ஜவுளிக்கடையின் புதிய யுக்தி….ரோபோட் மூலம் வாடிக்கையாளர்கள் வரவேற்பு:

naveen santhakumar

பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி -பள்ளிக்கல்வித்துறை

Shobika