தமிழகம்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முதல்வராக  மு.க ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து தலைமை செயலகத்தில் தனது முதல்வர் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கினர். அதனையடுத்து முதல்வரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். 

இந்நிலையில் தமிழக தலைமையை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்த்த இவர் 1988 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக தனது பணியை தொடங்கிய இறையன்பு ஐ.ஏ.எஸ் சுற்றுலாத்துறை செயலாளராக இருந்துள்ளார்.

ALSO READ  திரௌபதி இயக்குனருடன் இணையும் கெளதம் மேனன் !

மேலும் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியும் வகித்துள்ளார். 2019 லிருந்து அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். தற்போதைய தமிழக தலைமைச் செயலாளராக உள்ள ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக MP ஆ.ராசா மீது 2 வழக்கு:

naveen santhakumar

கோவையில் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் சென்டர் துவக்கம் ! 

News Editor

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு தொடருமா….???

Shobika