தமிழகம்

ரெட் அலர்ட் – கன மழை காரணமாக விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Schools in Karaikal closed today due to heavy rains | கனமழை காரணமாக  காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! | Tamil Nadu News in Tamil

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவத்தற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும்; கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ  வெளுத்து வாங்கும் மழை- தத்தளிக்கும் சீனா ..!

நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்; சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது நற்செயலால் மக்களின் கவனத்தை ஈர்த்த பிச்சைக்காரர்:

naveen santhakumar

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

naveen santhakumar

34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு..

naveen santhakumar