தமிழகம்

கொரோனா எதிரொலி; மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் கட்டாயம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தியும் வருகிறது   

ALSO READ  கலாஷேத்ரா விவகாரம் - 4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ்..

அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் 10ஆம் தேதி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இ பாஸ் எடுத்து வரவேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கான சோதனையை மாவட்டத்தில் உள்ள நெட்டா, களியக்காவிளை,. கொல்லங்கோடு ஆகிய முக்கிய எல்லை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 

கேரளாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் இன்று முதல் இ-பாஸ் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனால் தமிழக கேரள எல்லை பகுதியான இஞ்சிவிளை பகுதியில் இ பாஸ் சோதனை இன்று முதல் துவங்கி உள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்பு

News Editor

தமிழில் அர்ச்சனை திட்டம் – கோவில்களில் துவக்கம்

naveen santhakumar

ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை – தமிழக அரசு உத்தரவு..

Shanthi