தமிழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட பிறகு   செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில்,பிளஸ் 2 பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். கொரோனா தொற்று தமிழக மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்த பரவலை கருத்தில் கொண்டுதான் உரிய முடிவு எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும் முக்கியம். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லாரும் சிபிஎஸ்இ பள்ளியை மனதில் வைத்துப் பேசினார்கள். தமிழகம் மட்டுமே ஸ்டேட் போர்டு மாணவர்களையும் மனதில் வைத்து பேசி உள்ளோம். தேர்வு தேதி மாநில அரசு  முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் எனக் கூறியுள்ளார்.


Share
ALSO READ  கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க……அரியர்….மதிப்பெண்ணில் குளறுபடி…….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதம் ரூ.1,000 உதவித் தொகை! உடனே விண்ணப்பிக்கவும்

naveen santhakumar

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது !

News Editor

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு… 

naveen santhakumar