தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தேர்தல் பரப்புரையின் இறுதி நாள் அன்று அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை செய்வதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், . தமிழகத்தில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் அன்று வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாலை 7 மணி வரை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபடலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, இன்று முடிவு செய்யப்படும்.இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும், என்றார்.
#Tamilnadu #ElectionPropaganda #TamilThisai #admk #dmk #bjp #congress #SathyaPrathaSahu #Tamilnadugovt #Tnelectioncommission #TNelection2021