தமிழகம்

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இக் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான உள் கட்டமைப்பு வசதிகள், தேர்தலுக்கு தேவையான பொருட்கள் இருப்பு, நிதி ஆதாரம், ஓட்டு பதிவு மையம், ஓட்டு எண்ணிக்கை மையம் மற்றும் பதட்டமான பகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

Tamil Nadu State Election Commission

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி, வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்சன் புஷ்பராஜ், திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் வேலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், ராணிப்பேட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருப்பத்துார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.


Share
ALSO READ  26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு…! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

Shanthi

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்; அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு !

News Editor