தமிழகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் தீவிபத்து…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகர்கோயில்:-

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கருவறை சேதமானது.

Image

கொரோனா காரணமாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை, மதியம், மாலை பூஜைகளை கோவில் பூசாரிகளே நடத்தி வருகின்றனர்.

ALSO READ  வெளிநாடுகள் தடுப்பூசி கொடுக்க முன்வந்தால் வரவேற்க வேண்டும்; விஜய் வசந்த் !

இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவௌ கூரை வரை பரவியதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தது.

தீவிபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக பொதுமக்களும், தீயணைப்பு துறையினரும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

ALSO READ  சாத்தூர் வெடி விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !

இதனிடையே, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் தீபாராதனை நடைபெற்றது. அந்த தீபத்தில் இருந்து எழுந்த தீ தான் தீவிபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து 30ஆம் தேதி முடிவு அறிவிப்பு -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Admin

காரில் 8 ஃபுல் பாட்டில், 2 கேஸ் பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. 

naveen santhakumar

சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தொடங்கி வைத்த முதல்வர் !

naveen santhakumar