தமிழகம்

தமிழகம் முழுவதும் தீ தொண்டு திருவிழா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரவிழா நடைபெற்று வருகிறது. தீ தொடர்பான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தீ தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்தல், விபத்துகளை தடுப்பதற்கு சரியான வழிமுறையாகும் என்ற வாசகங்களுடன் சேலம் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா முன் கள பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்து செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் தீ தடுப்பு குறித்து அறிந்து கொண்டனர். மேலும் தனியார் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ பரவினால் தடுக்கும் முறைகள், மாடியில் இருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டு வருதல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ALSO READ  தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

மேலும் சேலம்  மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் வேலு   தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு சாதனங்களை பயன்பத்தி தீயை அணைப்பது குறித்தும் விளக்கமளித்தனர். செய்முறை விளக்கத்தை தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் தீ தடுப்பதை செய்து காட்டி புரிந்து கொண்டனர்.

இதில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா பரவல்; சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இவர்களுக்கு ரூ.2000 பொங்கல் போனஸ்… தமிழ்நாடு அரசு அசத்தல்!

naveen santhakumar

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி

naveen santhakumar

புலி வேட்டையில் இறங்கிய நாட்டுநாய்…!

News Editor