தமிழகம்

இரண்டு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியாடி அடுத்த கஞ்சி குழியையைச் சார்ந்தவர் ஜெபமணி( 62) இவர் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி உரிமையாளராக உள்ளார்.

இவருக்கு பள்ளியாடியில் அலுவலகம் உள்ளது. அப்போது கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு வெள்ளாங்கோடு கல்லுவிளையைச் சேர்ந்த ஜாண்(38),ஞாறான்விளையை அடுத்த கடந்தான் கோட்டை சேர்ந்த விஜு(36),கடந்தான்கோட்டை சேர்ந்த ராஜன், காணிவிளையை சேர்ந்த ஷாஜி,குளித்துறை பாளையங்கட்டியை சேர்ந்த மணிகண்டன் (43) ஆகியோர் அறிமுகமாகி தங்களிடம் வெளிநாட்டு ஹவால பணம்  உள்ளதாகவும் ,நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி மேலும் நீங்கள் வேறு நபர்களை ரெடி செய்தால் அதற்கு தனியாக கமிஷன் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.  

இதனால் ஜெபமணி தனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் பேசி அகத்தி விளையை ராஜன் ,மூலச்சலை சேர்ந்த அனீஷ் ஆகியோரிடம் கடந்த 4.2.21 அன்று மாலை 6. 45 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு  ஜெபமணி மற்றும் நண்பர்களை பணத்துடன் வரவழைத்து அதன் மூலம் ஜெபமணி 2 லட்சமும் ,ராஜன் 9 லட்சமும், அனீஸ் 7லட்சமும்சேர்த்து 18- லட்சம் ரூபாய் மோசடிக் கும்பலிடம் கொடுத்துள்ளனர். 

ALSO READ  எந்த வேறுபாடும் இன்றி  என்னை ஆதரிக்கிறார்கள்; சைதை துரைசாமி பேட்டி !


உடனே ஹவாலா கும்பலிடம் பணத்தை பெற்று தருகிறோம் என கூறியவுடன். கும்பலில் உள்ள ஒருவன் டார்ச் லைட் அடித்தபடி போலீசார் சுற்றிவளைத்து விட்டனர் தப்பி ஓடி விடுங்கள் என கூச்சலிட்டு உள்ளார். இதனால் நாலாபக்கமும் அனைவரும் சிதறி ஓடி உள்ளனர். பின்னர் ஒரு வாரம் கழித்து ஜான், ஜெபமணியை  தொடர்புகொண்டு பணம்  அனைத்தையுமே போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். கவலை பட வேண்டாம் இனி 40 லட்சம் ரூபாய் ரெடி பண்ணுங்கள் ஒரு கோடி ஹவாலா பணம் பெற்றுக் கொடுக்கிறோம் என அந்த கும்பல் கூறியுள்ளது . உடனே உஷாரான ஜெர்மனி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள். 


இது சம்பந்தமாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர் உஷாரான காவல்துறையினர். மோசடி கும்பலை பொறி வைத்து பிடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி ஜெபமணி தான் சொத்தை விற்று 40 லட்சம் ரூபாய் வைத்திருப்பதாகவும், தாங்கள் எனக்கு ஒரு கோடி பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய மோசடி கும்பலை சேர்ந்த ஜான் , நான் ஒரு கோடி ரூபாயை சிராயன்குழி தம்புரான் குளத்தங்கரையில் தயாராக வைத்துக்கொண்டு காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.உடனே பணம் கொடுத்து ஏமாந்த கும்பலைச் சேர்ந்த ராஜன் மற்றும் அனிஷ் ஆகியோர் பணம் கொண்டு வந்து உள்ளனரா என உறுதி செய்ய சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது ஒரு சாக்குமூட்டையில் கட்ட கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை திறந்து காட்டி உள்ளார்  .உடனே இவர்கள் இருவரும் நம்பியதை போன்று கூறிவிட்டு ஜாணுடன்  பணத்தை கொண்டு வருகிறோம் என கூறி சென்றனர். 

ALSO READ  ‘தல தோனி’தான் கிரேட்… சொன்னது யார் தெரியுமா?


அதனையடுத்து  அங்கு தயாராக நின்ற மார்த்தாண்டன் காவல்துறையினர் மோசடிக் கும்பல் அவரை சுற்றி வளைத்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது. மேல் பகுதியில் மட்டும் 500 ரூபாய் நோட்டு வைத்து மறைத்து வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதில் மோசடி கும்பலை சேர்ந்த ஜாண்மற்றும் மணிகண்டனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இது போல பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம்

News Editor

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

naveen santhakumar

மாற்றுத்திறனாளிகள்,முதியோர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யலாம்..

Shanthi