கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் இருசக்கர வாகனங்களில் ஆக்சிஸின் சேவை வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டார். அவர்கூறியதவது. கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ஆனது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது.
குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இரு சக்கர வாகனங்களில் பிராணவாயு வழங்கும் செயலுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.
மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் கூறினார். பின்னர்கொடியசைத்து இருசக்கர வாகனங்களில் ஆக்ஸிஜன் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தியவிலேயே முதல் முறையாக இருச்சகரவகனங்களில் ஆக்ஸிஜன் சேவை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.