தமிழகம்

சாலை விபத்தில் காப்பாற்றினால் ரூ.5,000 பரிசு பிளஸ் சான்றிதழ் வழங்கப்படும் : தமிழக அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

modi govt on road accident: 5000 rupees will be given who takes road  accident victims to hospital » Press24 News English

தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்.

ALSO READ  இன்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் நேரம் மாற்றம் …!
Rs 5000 cash reward for Good Samaritans for taking road accident victims to  hospital: Do we need a sweetener being compassionate?

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும்.

ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர்.

ALSO READ  தமிழகத்தில் “இல்லம் தேடி கல்வி திட்டம் ” தொடக்கம்..!

அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் ‘ மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ‘ ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000/- பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என் மீது பொய் வழக்குகள்; தற்கொலைக்கு தூண்டுகின்றனர்- நீதிமன்ற நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்..!!

News Editor

தமிழகத்தில் யூ-டியூப்பிற்கு தடை?… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு!

naveen santhakumar

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin