தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா பரவல்; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதனை தடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில்…

  • தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.
  • பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.தனியாக செயல்படுகிற மளிகைக் கடைகள் போன்ற சிறிய கடைகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கம்போல் செயல்படும் என்றும், 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
  • சென்னை உட்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகள் ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
ALSO READ  இந்தியா - பிரிட்டன் இடையே மீண்டும் விமான சேவை...!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளிப் பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப் படுகிறதா?????

naveen santhakumar

செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Admin