தமிழகம்

மிரட்டும் கொரோனா; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. 

இந்நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.  இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

புதிய கட்டுப்பாடுகள் !

  • தேநீர் கடைகள் மதியம் 12.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது; உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.விடுதிகளில் தங்கியுள்ளவாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.
  • பலசரக்கு, மளிகை, காய்கறி கடைகள் ஆகியவை குளிர்சாதன வசதியின்றி மதியம் 12.00 மணிவரை மட்டுமே இயங்கலாம். 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் தவிர இதரக் கடைகள் அனைத்தும் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
  • மீன் இறைச்சிக் கடைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையே இயங்கும். 
  • பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், அரசு, தனியார் பேருந்துகள், வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50% பேர் மட்டுமே பயணிக்கலாம்.அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
  • வணிக வளாகங்களில் பலசரக்குக் கடைகள், காய்கறி கடைகளுக்கு இனி அனுமதியில்லை. மூன்றாயிரம் சதுர அடி கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடரும்.
  • இறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்குப் பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சமுதாயம், அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.
ALSO READ  மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…..எவற்றிற்கெல்லாம் அனுமதி???

ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளும் அப்படியே தொடரப்படும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்குகிறார்….

Shobika

ஆன்லைன் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏற்பாடு செய்துள்ளது…!!

Admin

காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

News Editor