தமிழகம்

மத்திய சிறை; கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1330 பேர் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு நோட் புக் தயாரிப்பு, பைண்டிங் உள்ளிட்ட பணிகளுடன் கூடுதலாக அவர்களது வருவாய்க்காக தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, சிறை வளாகத்துக்குள் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தையும் சிறைவாசிகள் மேற்கொண்டு வருகிறார்கள். 

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

இந்நிலையில் இன்று வழக்கம் போல் தோட்ட வேலைக்கு நன்னடத்தை சிறைவாசிகள் அனுப்பட்டனர். அப்போது கோவிந்தராஜ் என்ற கைதி தப்பித்து ஓடிவிட்டார். இவர் கன்னியாக்குமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர். கைதி கோவிந்தராஜ் 2006ம் ஆண்டு அஞ்சுகிராமம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யபட்டு 2019ம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தன்டனை வழங்க பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டிருந்தது. 


 இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்ப செய்தி!

Shanthi

அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் – காசோலை மூலம் செலுத்த முயற்சி

News Editor

குட் நியூஸ் !! 3 நாளில் மின்சாரம் …!

News Editor