தமிழகம்

கோரதாண்டவம் ஆடும் கொரோனா… சென்னையில் மட்டும் இத்தனை தெருக்களில் தொற்றா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 521ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். சென்னையில் அப்படி இதுவரை 2 ஆயிரத்து 134 தெருக்களில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் 521ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக நேற்று மட்டும் 1,690 நபர்களிடமிருந்து 3 லட்சத்து 51 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 முதல் தற்போது வரை மொத்தம் ரூ.40 லட்சத்து 20 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  கொரோனவால்  நிரந்தரமாக மூடப்படும் பள்ளி; பெற்றோர்கள் அதிர்ச்சி 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

Shobika

நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

Admin

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

naveen santhakumar