இந்தியா தமிழகம்

இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் குரூப் 2 தேர்வு ; தேர்வர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு முழுவதும் 5400 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2A தேர்வு இன்று (மே21) நடைபெற உள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் இரண்டு வருடமாக தமிழ்நாட்டில் போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் அதிருப்தியான மனநிலைமையில் காணப்பட்டனர். தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று குறைந்த வண்ணம் காணப்படுவதால் போட்டித் தேர்வுகள் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. அதன்படி குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கான தேர்வு இன்று (மே 21) நடைபெற உள்ளது.

மேலும் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்றும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்றும் 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் TNPSC அறிவுறுத்தியுள்ளது .

ALSO READ  ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடும் பின்னடைவு !

மேலும் குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்மாவதி தாயார் கோவில் கட்ட நன்கொடையாக நிலம் வழங்கியுள்ளார் நடிகை காஞ்சனா:

naveen santhakumar

சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

News Editor

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று உலக சாதனை

News Editor