தமிழகம்

இன்று 17 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமா தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Chance of  heavy rain in 6 districts: Meteorological Center announcement -  hindutamil.in

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை !!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் பாடல் வெளியீடு

News Editor

தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் உத்தரவு  

News Editor

அத்தியாவசிய காய்கறி விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

naveen santhakumar