தமிழகம்

கனமழை எதிரொலி: 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனமழை காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | Dinamalar Tamil News

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,28) இரவு முதல் மழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கியது.

ALSO READ  மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் - முதல்வர் உத்தரவு

இதனையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், கூத்தாநல்லூர், வடுவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

ALSO READ  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் :

அதிகபட்சமாக நேற்று இரவு மட்டும் திருவாரூரில் 8 சென்டி மீட்டர் மழையும், நன்னிலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மாவட்த்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் இன்றைக்கும் இவ்வளவு பேருக்கு கொரோனாவா?

naveen santhakumar

e-Pass பெறாதவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்று கிடையாது… 

naveen santhakumar

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… காவல்துறை அதிரடி!

naveen santhakumar