தமிழகம்

12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி , தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை வரும் நவம்பர் மாதம் தமிழ்நாடு முதல்வன் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச் செயலகம்... ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘வீடு தேடி கல்வி’ என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க விரும்பும் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கான இணைய தளத்தையும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டத்தை அடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை அறிவித்தார்.

கோவிட் காலத்தில் கல்வியை மீட்டெடுப்பது எப்படி? | Covid 19 - hindutamil.in

இந்த திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.

ALSO READ  “பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு 36 கலைக் குழுக்கள் மூலம், மாலையில் 1 மணி நேரம் கலை, நிகழ்ச்சிகள், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பாடங்களை சொல்லிக் கொடுத்து பள்ளிகளின் மேல் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுவார்கள்.

இதை கண்காணிக்க மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவும், வட்டார அளவில் பிடிஓ தலைமையில் ஒரு குழுவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள் அளவில் ஒரு குழுவும், பள்ளி மேலாண்மை குழுக்கள் என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். வாரத்தில் 6 மணி நேரம் பாடங்கள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.

ALSO READ  கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு...
மின்னம்பலம்:பள்ளிக் கல்வித் துறையில் குழப்பம்: அமைச்சர் அன்பில் மகேஷ்  ஆலோசனை!

இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் இன்று இணைய தளம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த இணைய தளம் மூலம் விருப்பம் உள்ளவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த பிளஸ் 2 படித்தவர்களும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்த ஏதாவது ஒரு பட்டம் படித்தவரும் விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். நவம்பர் 10ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்து இந்த திட்டம் செயல்படத் தொடங்கும். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

TNPSC மோசடி…..மேலும் 20 பேர் கைது….

naveen santhakumar

கோவில் பிரசாதங்கள் தயாரிப்பில் அதிரடி மாற்றம்!

naveen santhakumar

‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது’ – ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதியை ஒருமையில் பேசிய போலீஸ்… 

naveen santhakumar