தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா- புதிய கட்டுப்பாடுகள்; வெளியானது அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் மீண்டும் இரண்டாயிரத்தை நோக்கி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

The-district-collector-has-ordered-the-imposition-of-new-additional-restrictions-in-Tirupur-district-from-today

குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஆரம்பமாகிவிட்டதா என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று முதல் (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

ALSO READ  11 மாவட்டங்களுக்கு தளர்வில்லை !!

மீன, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ALSO READ  ஆன்லைன் ரம்மிக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் …!

மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் மால்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பொருந்தும்.

பொள்ளாச்சி மாட்டுச் சந்தை இன்று (ஆகஸ்ட் 4) முதல் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சென்னை, கோவை, பெரம்பலூர், திருப்பூர் என பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இவை மற்ற பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.

naveen santhakumar

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகள் வெளியீடு..!

Admin

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்ப பெறவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !

News Editor