தமிழகம்

“பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

iftamil - பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல்  தவறானது: அமைச்சர் அன்பில் மகேஷ் !

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன.

கொரோனா பாதிப்பு குறைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட முழுமையாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளித்து வருகிறது.

ALSO READ  அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

இந்நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஓமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே ஓமைக்ரான் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற சமூகவலைதளத்தில் வழக்கம் போல் வதந்தி பரவியது.

ALSO READ  ரெட் அலர்ட் - கன மழை காரணமாக விடுமுறை

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,

ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கெனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் , மழையால் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பு; பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை- தமிழக அரசு!

naveen santhakumar

தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கினை நீட்டிக்க பரிந்துரை….

Shobika

தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

News Editor