தமிழகம்

இ-பதிவு சந்தேகங்களுக்கு இலவச ஹெல்ப் லைன் எண் அறிமுகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சரிவர மக்கள் கடைபிடிக்காத காரணத்தால் கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ALSO READ  வாழ்வா சாவா நேரத்தில் இது மட்டும் அவசியமா?? சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்… 

அந்தவகையில், திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு, மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இ-பதிவில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..

naveen santhakumar

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா?

Admin